தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பான முடிவு இன்று (28.01.2026) அறிவிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர், எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார்.

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளில் இல்லாத மருந்துகளை வெளியிலுள்ள மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை விநியோகிப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட 05 விடயங்களை முன்நிறுத்தி, கடந்த திங்கட்கிழமை காலை முதல் அச்சங்கம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects