களுவாஞ்சிகுடியில் சமுர்த்தி ஆரோக்கிய உணவக கடை திறந்து வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி ஆரோக்கிய உணவக கடையானது பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் களுவாஞ்சிகுடி பஸ் தரிப்பிட கட்டிடத்தில் 26.01.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கங்களை ஊக்குவித்தல், சத்து நிறைந்த பயனுள்ள உணவுகளை வழங்குதல், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு வழங்குதல், சமூகத்தின் நன்மை போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன.

இதன்போது, பட்டிருப்பு சித்தி விநாயகர் பாலர் பாடசாலைக்கு ஒளியமைப்பு கருவி ஒன்றும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு, விசேட அதிதியாக பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.கங்காதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects