‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், பாதிப்புக்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, அபிவிருத்தி லொத்தர் சபை 15.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளத
இதற்குரிய காசோலையை அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேமந்த சுவர்ணதிலக , ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (02) கையளித்தார்.
இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) கசுன் ஜயசூரிய மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (விற்பனை) சாணக்க தொடங்கொடகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










