அரசாங்கத்தினால் முதியோர்களைக் கௌரவிக்கும் நோக்கில் தங்களது வீடுகளில் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலகம் தோறும் இடம்பெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் 12.11.2023 அன்று ஓட்டமாவடி பிரதேச செலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அறுபது வயதுக்கு மேற்பட்ட பத்து பயனாளிகளுக்கு கட்டில், மெத்தை, சாய்மனைக்கதிரை, தலையணை போன்ற பொருட்களை கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக பழைய கட்டிடத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் றஹீம், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி நஜிமுதீன், சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான பொருட்களைக் கையளித்தனர்.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையில் முதியோர் தங்களது வீடுகளில் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வசதிகள் மற்றும் சுகாதார பொருட்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி. நஜிமுதீன் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇