ஒட்டகங்களுக்கும் இனி கடவுச்சீட்டு அவசியம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சவூதி அரேபியாவின் அடையாளம் மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஒட்டகங்களுக்கு இனி அதிகாரபூர்வ கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பை சவூதி சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் படி, பச்சை நிற அட்டையைக் கொண்ட இந்த கடவுச்சீட்டில், சவூதி அரேபியாவின் தேசிய இலச்சினை மற்றும் தங்க நிறத்திலான ஒட்டகத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஒட்டகத்திற்கும் ஒரு பிரத்தியேக அடையாள எண் வழங்கப்பட்டு, அதன் மூலம் ஒட்டகங்களின் உற்பத்தி திறன் மற்றும் ஆரோக்கியம் குறித்த நம்பகமான தரவுத்தளம் உருவாக்கப்படும்.

ஒட்டகங்களின் உரிமையாளர்களைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தவும், அவற்றின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டக விற்பனை, போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், முறையான ஆவணங்களை உறுதிப்படுத்தவும் இந்த கடவுச்சீட்டு பயன்படும்.

சவூதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒட்டக அழகுப் போட்டிகளில் சில உரிமையாளர்கள் ஒட்டகங்களின் உதடுகள் மற்றும் திமில்களை அழகாகக் காட்ட ஊசி போடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், கடவுச்சீட்டு முறை மூலம் இத்தகைய முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியாவில் சுமார் 22 லட்சம் ஒட்டகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அரேபிய தீபகற்பத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒட்டகங்கள் போக்குவரத்திற்கும், அந்தஸ்திற்கும் அடையாளமாக விளங்குகின்றன.

சமீபத்திய ஆய்வுகளின்படி, சவூதி மலைப்பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள ஒட்டகச் சிலைகள் சுமார் 7,000 ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects