பால் உற்பத்தியை இலங்கையில் அதிகரிக்க பாகிஸ்தானிலிருந்து ‘சாஹிவால்’ இனக் காளைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் விதமாக, பாகிஸ்தானிலிருந்து உயர்தர ‘சாஹிவால்’ (Sahiwal) இனக் காளைகள் இன்று (05.02.2026) இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன.

அதன் பிரகாரம், இலங்கையின் கால்நடை வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான கால்நடை வளர்ப்பு உறவில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

உலகளவில் புகழ்பெற்ற இந்த சாஹிவால் மாடுகள், அதிக வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியவை மற்றும் நோய்களை எதிர்க்கும் பலம் கொண்டவை.

எல்லாவற்றிற்கும் மேலாக, இவை அதிக பால் கொடுக்கும் திறன் கொண்டவை.

இந்த காளைகளின் மூலம் உயர்தர விந்தணுக்களைப் பெற்று, அவற்றை இலங்கையிலுள்ள உள்ளூர் மாடுகளுக்குச் செயற்கைச் சினைப்படுத்தல் மூலம் செலுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இலங்கையிலுள்ள மாடுகளின் இனத் தரம் உயர்வதோடு, பாலின் அளவும் பெருமளவு அதிகரிக்கும்.

வெளிநாடுகளிலிருந்து அதிக விலைக்கு பால் பொருட்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

இத் திட்டத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகளின் வருமானம் உயரும் என்பதோடு, நாட்டு மக்களுக்கான உணவுப் பாதுகாப்பும் பொருளாதார நிலையும் வலுப்பெறும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects