உலகில் அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்ட அமைதி நடைபயணம் (Peace March), 2,300 மைல்கள் நீண்ட பயணத்தை நிறைவு செய்து வொஷிங்டன் டி.சியை சென்றடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் (Fort Worth) பகுதியில் ஒரு துறவிகள் குழுவால் தொடங்கப்பட்ட இந்த அமைதி நடைபயணம், 108 நாட்களுக்குப் பின்னர் இன்று (11.02.2026) வொஷிங்டன் டி.சி.யில் நிறைவடைந்தது.
டெக்சாஸில் உள்ள ‘ஹியுங் தாவ் விபாசனா தியான மையத்தைச்’ (Huong Dao Vipassana Bhavana Center) சேர்ந்த துறவிகள் குழுவினர் இந்த நடைபயணத்தை வழிநடத்தினர்.
இந்த நடைபயணத்தில் இணைந்த “அலோகா” (Aloka) என்ற நாய், உலகம் முழுவதும் உள்ள பலரின் கவனத்தையும் அன்பையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










