தெரிவு செய்யப்பட்ட புகையிரதங்களில் அதிநவீன ‘உணர்திறன் கேமரா கட்டமைப்பை பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பதை தடுக்கும் வேலைத்திட்டமாக இப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுற்றாடல் மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து இதற்கான வழிகாட்டலை வழங்கியுள்ளது.
யானைகள் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பதை தடுப்பதற்கான பல்வேறு நடைமுறை தீர்வுகளை நடைமுறைப்படுத்த குறித்த அமைச்சுகள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை குறித்த முயற்சிகளின் கீழ் புகையிரத அட்டவணைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா கட்டமைப்பை ஆதர் சி. கிளார்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக காணப்படும் புகையிரத மார்க்கங்களின் ஊடாக பயணிக்கும் புகையிரதங்களில் இக் கேமரா கட்டமைப்பு பொருத்தப்படுகிறது.
புகையிரத நிலைய ஊழியர்களுக்கு இது தொடர்பான விசேட பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்புகளையும் இதில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










