இலஞ்ச ஊழல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 28.11.2023 அன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச் செயலமர்வில் ஊழல், இலஞ்சம் தொடர்பாகவும் ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள் மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம், சர்வதேச மட்டத்தில் இனங்காணப்பட்ட ஊழலின் விளைவுகள், ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கான தெளிவூட்டல்கள் கள உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன..
செயலமர்வின் வளவாளராக பிரதேச செயலாளர் கலந்து கொண்டு வாழவாண்மையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇