ஐபோன் 18இல் அறிமுகமாகும் புதிய திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

Apple நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 18 (iPhone 18) தொடரில், ஐரோப்பிய சந்தைகளிலும் பிசிக்கல் சிம் அட்டை (Physical SIM) வசதியை முழுமையாக நீக்கிவிட்டு, eSIM முறையை மட்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிம் அட்டை ட்ரேயை (SIM Tray) அகற்றுவதன் மூலம் தொலைபேசியில் உள்ளே கிடைக்கும் கூடுதல் இடத்தைப் பயன்படுத்தி, பெரிய அளவிலான மின்கலத்தைப் பொருத்த Apple திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக iPhone 18 Pro Max வகை தொலைபேசியில் 5,100mAh முதல் 5,200mAh வரையிலான திறன் கொண்ட மின்கலம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் தொலைபேசியை விட 5 சதவீதம் கூடுதலாகும்.

2022 இல் அமெரிக்காவில் ஐபோன் 14 அறிமுகமானபோது இந்த eSIM-only முறை முதன்முதலில் அறிமுகமானது.

கடந்த ஆண்டு ஜப்பான், கனடா மற்றும் UAE போன்ற நாடுகளிலும் ஐபோன் 17 தொலைபேசிகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது ஐரோப்பாவிற்கும் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.

சிம் அட்டையை மாற்ற வேண்டிய அவசியமின்றி டிஜிட்டல் முறையில் எளிதாக சேவையைப் பெறலாம்.

அடிக்கடி தொலைபேசிகளை மாற்றுபவர்களுக்கும், சிம் அட்டைகளை மாற்றி பயன்படுத்துபவர்களுக்கும் இது சவாலாக அமையலாம்.

சில நாடுகளில் புதிய eSIM பெறுவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் iPhone 18 Pro, iPhone 18 Pro Max மற்றும் ஆப்பிள் இன் முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியான iPhone Fold ஆகியவை அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

சாதாரண ஐபோன் 18 தொலைபேசி அடுத்த ஆண்டு iPhone Air உடன் அறிமுகமாகலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects