அம்பத்தலே முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாய் வழியில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, இரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை பகுதியில் நீர் விநியோகம் தடைப்படாது என்ற போதிலும், அங்கு குறைந்த அழுத்தத்திலேயே (Low Pressure) நீர் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகக் குழாய் திருத்தப்பணிகள் நிறைவடைந்தவுடன் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










