இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியக் கடற்படையின் ‘ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக்கப்பல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்திய – இலங்கை கடற்படைத் தொடர்புகளை விரிவுபடுத்தி, நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்பும் நோக்கில், இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் தரங்கினி’ (INS Tarangini) எனும் பாய்மரக்கப்பல் இன்று (27.02.2026) திருகோணமலை அஷ்ரொப் முனையத்தை வந்தடையவுள்ளது.

இயந்திரம் மற்றும் எரிவாயு விசையாழியைக் (Gas Turbine) கொண்ட இத்தகைய பாய்மரப் பயிற்சி கப்பல்கள் உலகளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கடற்படைகளிடமே உள்ளன. இதில் இந்தியக் கடற்படை இத்தகைய கப்பலைத் தன்னிடம் கொண்டுள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும். இந்தப் பாய்மரக் கப்பல் இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

திருகோணமலை அஷ்ரொப் முனையத்தை வந்தடையும் இக்கப்பலில் ஏழு அதிகாரிகள் மற்றும் முப்பது கடற்படையினர் அடங்கிய பணியாளர்கள் குழு இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

இக்கப்பல் திருகோணமலையில் இன்று (27) முதல் மார்ச் 02 ஆம் திகதி வரையிலும் கொழும்பில் மார்ச் 06 ஆம் திகதி முதல் மார்ச் 09 ஆம் திகதி வரையும் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் தரித்து நிற்கும் காலப்பகுதியில் துறைமுகக் கட்டம் மற்றும் கடல் கட்டம் என இரு நிலைகளில் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பயணப் பயிற்சி மற்றும் அனுபவங்களை வழங்கவுள்ளது.

இந்த இந்தியப் பயிற்சி ஐ.என்.எஸ் தரங்கினி’ (INS Tarangini) எனும் பாய்மரக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் நிதின் கஜ்ஜர் (Commander Nitin Gajjar) பணியாற்றுகிறார்.

உலகப் புகழ்பெற்ற கப்பல் வடிவமைப்பாளரான கொலின் மூட் என்பவரால் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

இது எஃகு உடற்பகுதியையும் (Steel Hull), அலுமினியம் மற்றும் தேக்கு மரத்தாலான தளங்களையும் கொண்டு வலிமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects