‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதற்கான காசோலை இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் கே. ஜி. ஜினதாசவினால், 26.02.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் உப செயலாளர் கியூ. பத்திரணகே, பொதுச் செயலாளர் வி. இராஜேந்திரன், நிறைவேற்று உறுப்பினர் எச். கே. டி. ஹேமந்த மற்றும் முன்னாள் தலைவர் எச். ஜி. நிஹால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










