Youth Link Sri Lanka நிகழ்வு மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Youth Link Sri Lanka நிகழ்வு இன்று (05.03.2026) மட்டக்களப்பில் ஆரம்பமாகுவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன தெரிவித்தார்.

அதன்படி, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று இடங்களில் தங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இத் திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் என்றும், அதன்படி, மாத்தளை மற்றும் குருநாகலைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அம்பாறை மாவட்டத்திற்குச் செல்வார்கள் என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Yoth Link Sri Lanka நிகழ்ச்சித் திட்டம் குறித்து தெளிவு படுத்தும் ஊடகக் கலந்துரையாடல் 04.03.2026 அன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்பும் சவாலை முறியடிப்பதற்கான Youth Link Sri Lanka இலங்கை நிகழ்ச்சித் திட்டம் ஒரு சிறந்த அணுகுமுறையாகும் என்றார்.

சவால்களை எதிர்கொள்ளக்கூடிய இளைஞர் குழுவையும், கருணையுள்ள இளைஞர் சமூகத்தையும் உருவாக்குவதில் இத்தகைய திட்டங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய இளைஞர்களுக்கு சரியான திசையைக் காட்டுவதற்குப் பொறுப்பான முன்னணி அமைப்பான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலையீட்டைப் பாராட்டுவதாகவும் பிரதி அமைச்சர் அமைச்சர் குறிப்பிட்டார். குறுகிய அரசியல் நோக்கங்களைத் தோற்கடிப்பதற்காக, சமயம், இனம் மற்றும் சாதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களும் தன்னிறைவு பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, Youth Link Sri Lanka திட்டத்தின் முதல் கட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது, இதன் போது வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 20 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் இளைஞர் பரிமாற்றத் திட்டம் “Connect – 2026 Youth Clubs (இளைஞர் கழகங்கள்) ” என்ற தலைப்பில் இலங்கை இளைஞர் கூட்டமைப்பின் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

18 முதல் 29 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட இருநூறு இளைஞர்கள் இந்த ஆறு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

திட்டத்தின் முதல் கட்டம் மே மாதத்தில் முடிவடையும். இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் மே 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 3 ஆம் திகதி முடிவடைவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects