மட்டக்களப்பில் மீன்பிடி தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மீன்பிடி தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மீன் பிடி பிரதியமைச்சர் ரத்ண கமகேவின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.07.2025 அன்று குறித்த விசேட கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது மீன் பிடி பிரதியமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இரா.சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நேக்கும் பிரச்சனைகளான மீனவர் இறங்குதுறை, மீனவர்கள் பயன்படுத்தும் வீதிகள் புணரமைப்பு, சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கைகளுக்கான தீர்வு, நன்னீர் மீன் பிடி வளர்ப்பு, வெளிச்ச கோபுரங்கள் அமைத்தல், ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டு, சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் பிரதியமைச்சர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டதுடன், மேலும் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எதிர்வரும் காலங்களில் சரி செய்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects