அனைத்து காணி விபரங்களையும் வரைபடமாக்குவது (Mapping) தொடர்பான கலந்துரையாடல் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தாவின் தலைமையில் 04.03.2026 அன்று நில அளவைத் திணைக்களத்தில் நடைபெற்றது.
இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் முறையாக நிர்வகிப்பதற்காக, காணிகளை வரைபடமாக்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் மூலம், காணிகள் தொடர்பான முழுமையான விபரங்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், காணி பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளை எளிதாக்குவதற்கும், நவீன தொழில்நுட்பத்துடன் இணையாகச் செயற்படுவதற்கும் இது பெரும் உதவியாக அமையும்.
காணிகளை வரைபடமாக்கும் முதற்கட்ட நடவடிக்கை மொனராகலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்;
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்காகக் காணிகளைப் பெற்றுக்கொள்ள முன்வருகின்ற போதிலும், காணிகள் பற்றிய சரியான தகவல்கள் நிறுவனத்திடம் இல்லாத காரணத்தினால் அந்த வாய்ப்புகள் கைநழுவிப் போவதாகக் தெரிவித்தார்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










