அஸ்திரேலியாவின் 03 மாகாணங்களுக்கு புதிய தூதுவர்கள் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை மக்களின் தேவைகளை வினைத்திறனுடன் பூர்த்தி செய்யும் நோக்கில், அந்த நாட்டின் மூன்று முக்கிய மாகாணங்களுக்கான புதிய தூதுவர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளது.

இந்த புதிய நியமனங்கள் மேற்கு அஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு அஸ்திரேலியா ஆகிய மாகாணங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

புதிய தூதுவர்கள் அஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவிடம் இருந்து தமது நியமனக் கடிதங்களைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அதன்படி நியமிக்கப்பட்டுள்ளவர்கள்:

மேற்கு அஸ்திரேலியா – சிரந்த வீரவர்தன

குயின்ஸ்லாந்து – நளின் பெரேரா

தெற்கு அஸ்திரேலியா- திமுது சமரநாயக்க

அஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கான தூதரக சேவைகளை மாகாண மட்டத்திலேயே மிகவும் விரைவாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொடுப்பதே இந்த நியமனங்களின் பிரதான நோக்கமாகும்.

இதன் மூலம் வெளிநாட்டுத் தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects