ஒரு வார காலத்திற்கு தனது விமான சேவைகளை இரத்து செய்துள்ள ஓமான் எயார்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை தொடர்ந்து, இன்று (09.03.2026) முதல் இம் மாதம் 15 ஆம் திகதி வரை வளைகுடா நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக ஓமான் எயார் (Oman Air) அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த ஒரு வார காலப்பகுதியில் டுபாய், பஹ்ரைன், தோஹா, தம்மாம், குவைத், பக்தாத், காசாப் (Khasab) ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் பாதிக்கப்படும் என அந்த விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கோபன்ஹேகன் (Copenhagen) நகருக்கான விமான சேவைகளும் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஓமான் எயார் குறிப்பிட்டுள்ளது.

வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாகப் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects