மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் கோணேஸ்வரன் சந்திரகலாவின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் 17.06.2026 அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம், மாதாந்த முன்னேற்ற மீளாய்வு மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களில் தரவுத் தளத்தின் முக்கியத்துவம் பற்றியதான கலந்துரையாடல் நடைபெற்றது.

மாவட்டத்தில் 9820 மாற்றுத் திறனாளிகளின் முழுமையான தரவுகள் தரவுத்தளத்தில் இற்றைப்படுத்தப்படவுள்ளன.

மாவட்டத்தில் 9155 நபர்கள் அங்கவீனமுற்றோர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் மாதாந்த நலன்புரி கொடுப்பனவுகள் பெற்று வருகின்றனர்.

இத் தரவுத்தளத்தினை உருவாக்குவதற்கான நிதி அனுசரனை மெதடிஸ்த திருச்சபையின் புகலிடம் அமைப்பு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சிரேஸ்ட சமூக சேவை உத்தியோகத்தர், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான திருமாவட்ட சபை தலைவர் அருட்பணி சாமுவேல் சுபேந்திரன், KNH நிறுவனத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் ரம்யா ஜீரசிங்க, புகலிட நிகழ்சி திட்ட உத்தியோகத்தர் ஜெகன் ஜீவராஜ் மற்றும் புகலிடம் நிறுவன பிரதிநிதிகள், சமூகசேவை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects