2022 க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி குறித்து இன்று 01.12.2023 குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 274,304 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதுடன் 166,967 பரீட்சார்த்திகள் ஆரம்பத் தகைமையை பூர்த்தி செய்துள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதிக்கு 84,176 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதுடன், இந்த வருடம் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
உயிரியல் அறிவியலுக்கு 9,896, பௌதிகவியலுக்கு 8,071, வணிகம் 7,850, கலைப் பிரிவுக்கு 11,780, பொறியியல் தொழில்நுட்பம் 2,295, உயிரியல் தொழில்நுட்பம் 1,536 மற்றும் மேற்கூறிய எந்தவொரு பாடத்திற்கும் தொடர்பில்லாத 719 மாணவர்கள் முதற் கட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்ய எதிர்ப்பார்க்கப்படுவதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇