இலங்கையின் 05 ஆவது தேசிய வாய் சுகாதார கணக்கெடுப்பு இன்று (10.03.2026) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விசேட கணக்கெடுப்பு நடவடிக்கை இன்று (10.03.2026) முதல் எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
அதன் அடிப்படையில், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வீடுகளை மையமாக வைத்து தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.
தேசிய வாய் சுகாதார கணக்கெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்கு வருகை தரும் எமது வைத்தியக் குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு, தேசிய வாய் சுகாதார கணக்கெடுப்பின் பிரதான ஆய்வாளர், விசேட வைத்திய நிபுணர் நிலந்த ரத்நாயக்க, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










