ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வீடமைப்புத்திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொட்டாவையில் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மாடி வீட்டுத் தொகுதியின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கண்டறிவதற்காக, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர 09.03.2026 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த வீட்டுத் திட்டம் சீன அரசாங்கத்தின் உதவித் தொகையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில், இத்திட்டம் 7 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.

மேலும், இதில் மொத்தம் 108 வீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கான மொத்த கட்டுமானச் செலவு 1,500 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நவீன வசதிகளுடன் கூடிய இந்த வீட்டுத் தொகுதியில் மத்திய எரிவாயு விநியோகக் கட்டமைப்பு போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டப்பணிப்பாளர் நிஹால் திசாநாயக்க தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects