பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் மட்டக்களப்பில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறை தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜின் ஆலோசனையின் கீழ் புதிய மாவட்ட செயலகத்தில் 10.03.2026 அன்று நடைபெற்றது.
இச் செயலமர்வின் வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.
ஊழல் பற்றி இலங்கையின் சட்ட ரீதியான பொருள் கோடல் தொடர்பான விளக்கங்கள், 2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.
அத்துடன் ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள் மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம், ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் மேலும் நடைமுறைசார் லஞ்சம், உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடு மற்றும் ஊழல் தொடர்பான விடய ஆய்வுகள் மூலம் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










