புதன்கிழமைகளில் சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை குறைக்கும் நோக்கில், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் குறிப்பிட்ட சில திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை பின்வரும் பிரிவுகளுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காசல் வீதியிலுள்ள புதிய அமைச்சுக் கட்டிடத்தில் அமைந்துள்ள அனைத்துத் திணைக்களங்கள்

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மலேரியா ஒழிப்புத் திட்டத் தலைமையகத்தின் அனைத்துப் பிரிவுகள்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

போக்குவரத்துப் பிரிவு தொடர்பான அத்தியாவசியப் பணிகள் “சுவாசிரிபாயா” கட்டிடத்தில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் ஏனைய சில முக்கிய கடமைகளுக்காக அதிகாரிகள் நேரில் சமூகமளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துப் பிரிவு தொடர்பான அத்தியாவசியக் கடமைகள் “சுவசிரிபாய” கட்டிடத்தில் வழமை போன்று நடைபெறும்.

சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் கீழ் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அதிகாரிகள் புதன்கிழமைகளில் “சுவசிரிபாய” வளாகத்திற்கு சமூகமளிக்க வேண்டும்.

சுகாதார அமைச்சின் ஏனைய திணைக்களங்களும் புதன்கிழமைகளில் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு கடமைகளை முன்னெடுப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சுகாதார சேவைகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects