2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் தற்போது நிறைவடையும் தருணத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர (O/L) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
சாதாரணதரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்படி, செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் சாதாரணதரப் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










