மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜீ. சுகுணன் இன்று (02.11.2026) சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இவருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் காதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரினால் சுகாதார அமைச்சில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை பணிப்பாளராகவும், கல்முனை வைத்தியசாலை பணிப்பாளராகவும் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects