இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் புதிய தலைவராக ரஞ்சித் ராஜசிங்க இன்று (25.08.2026) அதிகாரசபை வளாகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ரஞ்சித் ராஜசிங்க இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட நிதிக் கட்டுப்பாட்டுப் பதவிகள் மற்றும் ‘லக்ஸல’ நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளர் பதவி உட்பட உள்தணிக்கை, பொதுத்துறை ஆளுகை, பெரு நிறுவன நிதி மற்றும் இடர் மேலாண்மைத்துறைகளில் 27 ஆண்டுகளுக்கும் அதிகமான தொழில்முறை அனுபவம் கொண்டவர்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரபுக்பெல்ல, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பிரிமால் டி சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()






