தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகன இலக்கத்தை அனுப்பி வைப்பதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: வாகன இலக்கத்தைப் புகைப்படமாக அனுப்ப வேண்டாம்).
வாகன இலக்கத்தை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
தேசிய அடையாள அட்டை (NIC)
ஓட்டுநர் உரிமம் (Driving License) அல்லது கடவுச்சீட்டு
செல்லுபடியாகும் வாகன வருமான உத்தரவுப்பத்திரம் (Vehicle Revenue License)
வாகனப் பதிவுச் சான்றிதழ் (Vehicle Registration Certificate)
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் தெளிவான படங்களை அனுப்ப வேண்டும்.
வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்.
சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டை இலக்கமானது, வாகனப் பதிவுச் சான்றிதழில் உள்ள உரிமையாளரின் இலக்கத்துடன் ஒத்துப்போவது அவசியமாகும்.
அனுப்பப்படும் அனைத்துத் தனிப்பட்ட தரவுகளும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு அமையப் பாதுகாக்கப்படும் என அரசாங்க தகவல் மையம் உறுதி அளித்துள்ளது.
https://gic.gov.lk/complain-registration.html


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










