ஏப்ரல் மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் முன்பதிவுகளும் 18.03.2026 அன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

அதற்கமைய, 05 எரிபொருள் கப்பல்களுக்கான முன்பதிவுகள் 17.03.2026 அன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

முன்னர் மார்ச் மாத இறுதி வரை மட்டுமே எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தேவையான கப்பல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, அடுத்த மாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது.

பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,கியூ.ஆர் முறைமையில் நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளன.

ஒரு தொலைபேசி இலக்கம் மற்றும் ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects