கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று 04.12. 2023 முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 18 .12. 2023 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான சான்றிதழ்களை இணையவழியில் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇