போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்த பற்றாக்குறைய நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்தின் நெறிப்படுத்தலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் ஒத்துழைப்போடு இந்த இரத்ததான முகாம் 16.03.2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றும் உயர்ந்த மனிதாபிமான செயலில் அவசர சிகிச்சை தேவைப்படும் இரத்தத்தினை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










