இன்று (01.02.2024) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
5,000 ரூபாவாக இருந்த சாதாரண சேவை கடவுச்சீட்டு கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் ஒன்லைன் மற்றும் நேரடி பிரிவுகளுக்கு செல்லுபடியாகும் என குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரதத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் பொதிகளுக்கான விலை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபொல தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇