முதியோர் தினத்தினை முன்னிட்டு இன்று [04.10.2023] கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சம்மேளனதின் ஏற்பாட்டில் சிரமதானம் ஒன்றும் முதியோர்களுக்கான உணவு வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்வு சம்மேளன தலைவர் சு.சுஜீவா தலைமையில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் தயாசீலன் அவர்களின் வழிகாட்டலில் , சம்மேளனதின் உப தலைவர் யூட் டிலோன் மற்றும் சம்மேளனதின் ஊடகத்துறை செயலாளர் அ.நிரூஷன் ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும் இடம்பெற்றிருந்தது.
இவ் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.