கோறளைப்பற்று மத்தியில் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

“தேசத்தைக்கட்டியெழுப்பும் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலைத்திட்டத்திற்மைய நாட்டின் பல பிரதேசங்களிலும் உற்பத்தித்திறன் கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வுகள் 16.03.2026 அன்று நடைபெற்றன.

அதன்படி, வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பிறைந்துரைச்சேனை தெற்கு 206C கிராமசேவகர் பிரிவில் புகையிரத வீதிக்கு அருகாமையில் சமூக உற்பத்தித்திறன் கிராமம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தில் ஐம்பது குடும்பங்கள் உற்பத்தித்திறன் கிராம திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

சர்வமத தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமான இந்நிழ்வில், வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் யு.கே.எம்‌.அப்துல்லாஹ், பிரதேச சபையின் உதவிப்பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் க்ளீன் ஸ்ரீலங்கா இணைப்பாளருமான ஏ.எல்.சமீம், உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கையின் மூலம் வெறும் ஒரு வளமான நாட்டினை மட்டும் கட்டியெழுப்பாமல் மக்களின் எண்ணங்கள் மற்றும் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தி ஒரு அழகான வாழ்க்கையை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் வறுமைக்கும் பின்னடைவுக்கும் முக்கிய காரணமாக அமையும் மக்களின் எதிர்மறையான மனப்பாங்குகளை சாதகமாக மாற்றி வீடு மற்றும் சூழலை சுத்தமாக வைத்திருக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்துதல், ஒழுங்கமைக்கட்ட குடும்பக் கட்டமைப்பினை உருவாக்குதல் மற்றும் மனித உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியற்றினூடாக தனி நபர் மேம்பாட்டினை ஏற்படுத்த கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தில் தேசிய உற்பத்தித்திறன் கிராம வேலைத்திட்டம் செயலகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கிளீன் சிறிலங்கா திட்ட கருப்பொருள் நெறிமுறைகளின் கீழ் இலங்கையின் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட ஒரு கிராமத்தை சமூக உற்பத்தித்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரால் அடையாளம் காணப்பட்டவை மற்றும் எதிர்கால சமூக உற்பத்தி திறன் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையை அரசியல் தலைமை மற்றும் பிரதேச பிரதேச செயலாளருக்கு உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரால் சமர்ப்பிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects