‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, ஊவா மாகாண சபை அரச அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளம் 31,835,602 ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது.
அதற்குரிய காசோலை 24.03.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர மற்றும் ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










