நாட்டில் இன்று (25.03.2026) மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் ஏனைய பகுதிகளும் குளிர்ச்சியான வானிலை பதவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், பண்டாரவளையில் 14.0°C வெப்பநிலையும், பதுளையில் 17.5°C வெப்பநிலையும், கடுகஸ்தோட்டையில் 19.7°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
மத்திய மலைநாட்டிற்கு மாறாக, கரையோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 27.4°C அதிகூடிய குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 26.2°C வெப்பநிலையும், காலி மாவட்டத்தில் 25.9°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(வளிமண்டலவியல் திணைக்களம்)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










