மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் சிறுவர்களது பிரச்சினைகளை கையாளும் முறைகள் தொடர்பான பயிற்சி நெறி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்களிற்கு சிறுவர்களது பிரச்சினைகளை கையாளும் முறைகள் தொடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.03.2026 அன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, கிராமசேவகர் பிரிவுகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சிறுவர்களது பிரச்சினைகளை கையாளும் முறைகள் தொடர்பான இத்திட்டம் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் நடை பெற்று வருகின்றது.

இச்செயலமர்வில் கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர்கள், பாடசாலை பிரதிநிதிகள், பொலிஸ் நிலைய உத்தியோத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ மாதுக்கள், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் வளவாளராக மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி.மதிராஜ் கலந்து கொண்டு வளவாண்மை வழங்கினார்.

புகலிடம் நிறுவனம் இதற்கு அனுசரணை வழங்கியதுடன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects