தேசிய கியூ.ஆர் கொடுக்கல் வாங்கல் ஊக்குவிப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்து, “தேசிய கியூ.ஆர் கொடுக்கல் வாங்கல் ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (06.04.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையை நாணயத்தாள்கள் மற்றும் சில்லறை காசுகளின் பயன்பாடு குறைந்த பொருளாதாரமாக மாற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

குறிப்பாக, சிறு வணிகர்கள் எவ்வித மேலதிக செலவுகளுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதை இது உறுதி செய்யும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் வயது வந்தவர்களில் 89 சதவீதமானோருக்கு வங்கி வசதிகள் உள்ளன.

CEFTS கட்டமைப்பு ஊடாக ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன.

450,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் LankaQR வசதி நடைமுறையில் உள்ளது.

இருப்பினும், தற்போதும் சந்தையில் 1.48 டிரில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் காலாண்டில் LankaQR மூலமான மாதாந்த கொடுக்கல் வாங்கல்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டன. இந்த இடைவெளியைக் குறைப்பதே புதிய திட்டத்தின் இலக்காகும்.

கியூ.ஆர் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு விசேட அதிர்ஷ்ட லாபச் சீட்டிழுப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபா வரையான பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும்.

அத்துடன், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய “சமூகத் தெரிவுச் சுட்டி” மூலம் இதன் வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்காளிகளாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான கொடுப்பனவு முறைமையை நோக்கி இலங்கை எடுத்து வைக்கும் ஒரு பாரிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects