உயர்தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தின் இவ் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு 232 வது இராணுவ படைப்பிரிவின் பிரிகேடியர் அசித்த புஸ்பகுமாரவின் எற்பாட்டில் உன்னிச்சை கமுனுவொட்ச் பிரிவினரினால் , 232ஆம் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிலத்த பிரேமரத்ன தலைமையில் 05 .12. 2023 அன்று கரடியனாறு மகா வித்தியாலய மண்டபத்தில் கல்வி கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இக் கல்வி கருத்தரங்கு 8 .12. 2023 திகதி வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடம் பெறவுள்ளது.

மாணவர்களின் பாண்டு வாத்தியம் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியது.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு கல்வி வலய பிரதி பணிப்பாளர் என்.குகதாசன், பாடசாலையின் அதிபர் திருமதி சகிலா ஜெயக்குமார், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வி. ஜீவானந்தன், இராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்தும் நோக்கமாகவும் , இப் பாடசாலையில் வணிகப் பிரிவு மற்றும் கலைப்பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஜயங்களை தெளிவூட்டும் வகையிலும் இக் கருத்தரங்கு அமையவுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிலத்த பிரேமரத்ன எதிர்காலத்தில் மாணவர்களிடையே கல்வி சார் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதுடன் வெலி கந்தையில் உள்ள சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழியையும், தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும் கற்பதற்கு வழிவகை செய்துள்ளதுடன், மேலும் இப் பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்று இப் பாடசாலைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் அதிதிகளினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects