லாஃப்ஸ் எரிவாயு இன்று முதல் விநியோகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவினை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08.04.2026) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், 7,000 மெற்றிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. 

குறித்த எரிவாயு கையிருப்பினை லாஃப்ஸ் நுகர்வோருக்கு இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects