நாளை சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, நாளை (09.04.2026) மேலும் சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மத்தேகொட, பிராக்மணகம, கிரிகம்பமுணுவ, தீபங்கொட, பொலிஸ்கஸ்ஓவிற்ற வீதி, குடமாதுவ முதல் 342 பஸ் வீதி வரையான பகுதி, புபுது மாவத்தை முதல் 342 பஸ் வீதி வரையான பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அச்சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (08.04.2026) இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை ஹோமாகம ஹைலெவல் வீதி, பிட்டிபன சந்தியிலிருந்து கலகெதர, மாவத்தகம, பாதுக்க வீதி – கொடகம முதல் லியன்வெல பாலம் வரை, அத்துருகிரிய வீதி கொடகம முதல் ஹபரகட வரை, தாம்பே ஹொரகல வீதி, மாதுலாவ ஹொரகல வீதி, சோமரத்ன மாவத்தை, ஆடிகல வீதி, எம்புல்கம வீதி, ரனால ஹபரகட வீதி, மொரகஹஹேன வீதி மற்றும் புவக்வத்த வீதி ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுலாகும்.

மேலும், இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கலகெதர, இரிதா பொல பகுதி, பின்னவல, வேவெல்பனாவ, பிடும்பே, மீபே, மாவத்தகம, பாதுக்க, உடுமுல்ல, அருக்வத்த, வேரகல, போபே, மலகல, கஹவெல, மில்லவ, கொட்டியங்கொட, போரேகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மன, மீரியகல்ல மற்றும் யடவத்துர ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects