மட்டக்களப்பு மாவட்ட கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு விஜயம் செய்த சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் அழைப்பிற்கு இணங்க, சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப் பிள்ளை சதீசன் தலைமையில் சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர்  கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு  07.04.2026 அன்று வரவேற்கப்பட்டார்.

அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக  சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு பல கோடி பெறுமதியான இயந்திரத்தை கையாள்வது தொடர்பான பயிற்சிகளை இரண்டு வார காலம் மைதானத்தில் தங்கியிருந்து வழங்கவுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் கோட்டைமுனை விளையாட்டு புற்தரை மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் ஆடுகளங்களை சிறந்த முறையில் தயார் செய்வதற்கு இவரின் பயிற்சிகள் முக்கியம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட கிழக்கு மாகாணத்தில் புற்தரையிலான கிரிக்கட் மைதானம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளதுடன் இப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக  மாற்றுவதற்கும் அவர்களை தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும்   கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதன் போது கருத்து தெரிவித்த சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ்,

சர்வதேச தரத்தில் இவ் மைதானம் காணப்படுவதுடன் இப்பிரதேசத்தில் இருந்து முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் எதிர்காலத்தில் வரவாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects