ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இன்று (09.07.2026) காலை 6.00 மணி நிலவரப்படி WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.03 சதவீத அதிகரிப்பாகும்.
அத்துடன், பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.81 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.01 சதவீத உயர்வாகப் பதிவாகியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 73.57 டொலர்களாகக் காணப்படுவதுடன், இது 6.67 சதவீத பாரிய விலை உயர்வை பதிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் பிரெண்ட ரக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 80 டொலரை எட்டியிருந்தது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










