கடற்படை வீரர்களின் பிள்ளைகளின் கல்வித் திறமையை பாராட்டும் வகையிலும், அவர்களின் எதிர்காலக் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் இலங்கை கடற்படையினரால் புலமைப்பரிசில் வழங்கும் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், கல்விப் பொதுத் தராதர உயர்தரம், சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு, 06.04.2026 அன்று கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனங்கொட தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுக்களும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.
கடற்படை நலன்புரி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த நலன்புரித் திட்டத்தின் கீழ், இம்முறை 552 தகுதியுள்ள மாணவர்கள் நிதியுதவி பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக, 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக தகுதி பெற்ற 42 மாணவர்களும், அதே வருடம் சாதாரண தரப் பரீட்சையில் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்ற 53 மாணவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2025ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்த 457 மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் அடையாள ரீதியாக 13 மாணவர்களுக்கு கடற்படைத் தளபதியினால் புலமைப்பரிசில் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. சேவையில் உள்ள மற்றும் நாட்டிற்காக பணியாற்றி காயமடைந்து ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் சேவைகள் பணிப்பாளர் நாயகம், பணியாளர் பணிப்பாளர் நாயகம், கடற்படை நலன்புரி பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.














இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










