போக்குவரத்து விதி மீறல்களை முறைப்பாடு செய்ய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 11.04.2026 அன்று முதல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தொடர்பான காணொளி ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்காக 070 4755600 என்ற விசேட வட்ஸ்அப் இலக்கத்தையும் பிரதி பொலிஸ் மா அதிபர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த தொலைபேசி இலக்கமானது போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் 24 மணிநேரமும் செயற்படும்.

குறிப்பாக, பொதுமக்கள் வீதிகளில் அதிவேகமாகச் செல்லுதல், ஒரு சக்கரத்தில் வாகனத்தை ஓட்டுதல், ஆபத்தான முறையில் முந்திச் செல்லுதல் போன்ற காட்சிகளைக் கண்டால், அவற்றை காணொளியாக பதிவு செய்து குறித்த தெலைபேசி இலக்கங்களுக்கு அனுப்ப முடியும்.

காணொளியுடன் சேர்த்து, சம்பவம் நடைபெற்ற திகதி, நேரம், இடம் மற்றும் பொலிஸ் பிரிவு ஆகிய விபரங்களையும் தெளிவாகக் குறிப்பிடுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள் மூலம் ஏற்கனவே பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை மேலும் பலப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இருப்பினும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான காணொளிகளை அனுப்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஏனைய பயணிகளின் உயிரைப் பாதுகாக்கவும் பொதுமக்கள் இந்த செயற்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects