மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காகப் புகையிரதத் திணைக்களத்திடமிருந்து பல விசேட புகையிரத சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சித்திரைப் புத்தாண்டுக்காகத் தத்தமது ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காகப் புகையிரதத் திணைக்களம் பல விசேட புகையிரதப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளது. 

இந்தப் புகையிரதச் சேவைகள் நாளை (18.04.2026) மற்றும் நாளை மறுதினம் (19.04.2026) ஆகிய தினங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகப் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, அனுராதபுரம், காங்கேசன்துறை, மாத்தறை மற்றும் பெலியத்த ஆகிய இடங்களிலிருந்து மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இந்த விசேட புகையிரதச் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும், இவை சாதாரண புகையிரதச் சேவைகளுக்கு மேலதிகமாக ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

புகையிரத அட்டவணை 

[1] கொழும்பு கோட்டை / அனுராதபுரம் / கொழும்பு கோட்டை – 2026 ஏப்ரல் 18 மற்றும் 19 


கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு: மு.ப. 07.40 

அனுராதபுரத்தை சென்றடைதல்: மு.ப. 11.35 

அனுராதபுரத்திலிருந்து புறப்பாடு: பி.ப. 02.00 

கொழும்பு கோட்டையை சென்றடைதல்: பி.ப. 06.05 

[2] கொழும்பு கோட்டை / அனுராதபுரம் / கொழும்பு கோட்டை – 2026 ஏப்ரல் 18 மற்றும் 19 

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு: மு.ப. 06.40 

அனுராதபுரத்தை சென்றடைதல்: மு.ப. 10.38 

அனுராதபுரத்திலிருந்து புறப்பாடு: மு.ப. 10.50 

கொழும்பு கோட்டையை சென்றடைதல்: பி.ப. 02.54 

[3] காங்கேசன்துறை / அனுராதபுரம் / காங்கேசன்துறை – 2026 ஏப்ரல் 18 மற்றும் 19 

காங்கேசன்துறையிலிருந்து புறப்பாடு: மு.ப. 06.00 

அனுராதபுரத்தை சென்றடைதல்: மு.ப. 10.18 

அனுராதபுரத்திலிருந்து புறப்பாடு: மு.ப. 10.50 

காங்கேசன்துறையை சென்றடைதல்: பி.ப. 02.22 

[4] மருதானை / மாத்தறை – 2026 ஏப்ரல் 18 

மருதானையிலிருந்து புறப்பாடு: பி.ப. 01.00 (13.00) 

மாத்தறையை சென்றடைதல்: பி.ப. 04.37 (16.37) 

[5] மாத்தறை / மருதானை – 2026 ஏப்ரல் 19 

மாத்தறையிலிருந்து புறப்பாடு: மு.ப. 11.15 

மருதானையை சென்றடைதல்: பி.ப. 02.47 

[6] மருதானை / பெலியத்த – 2026 ஏப்ரல் 18 

மருதானையிலிருந்து புறப்பாடு: பி.ப. 04.40 (16.40) 

பெலியத்தவை சென்றடைதல்: பி.ப. 08.40 (20.40) 

[7] பெலியத்த / மருதானை – 2026 ஏப்ரல் 18 மற்றும் 19 

பெலியத்தவிலிருந்து புறப்பாடு: மு.ப. 08.20 

மருதானையை சென்றடைதல்: பி.ப. 12.30 

[8] பெலியத்தவிலிருந்து மஹவ வரை இயக்கப்பட்ட ரஜரட்ட ரெஜினி புகையிரதம் தற்போது தினசரி அனுராதபுரம் வரை இயக்கப்படுகிறது. 

பெலியத்தவிலிருந்து புறப்பாடு: மு.ப. 08.55 

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு: பி.ப. 01.15 

அனுராதபுரத்தை சென்றடைதல்: பி.ப. 06.47 

அனுராதபுரத்திலிருந்து புறப்பாடு: மு.ப. 05.15 

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பாடு: மு.ப. 10.30 

பெலியத்தவை சென்றடைதல்: பி.ப. 03.00

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects