பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (20.04.2026) ஆரம்பமாக்கியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்காக இன்று ஆரம்பமாக்கியுள்ள இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 

அதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. 

அதன்பின்னர்  முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 10 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects