2024ஆம் ஆண்டில் உலகில் வேகமாக வளரும் 5 சுற்றுலா தலங்களில் இலங்கையும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது
ஆறு மில்லியன் வாசகர்களை கொண்ட ட்ரவெல் ஒஃப் பாத் (Travel Of Path) சஞ்சிகை நடத்திய கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் 151,496 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இது இந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகையாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇