நிலவின் விளிம்பிற்குப் பின்னால் பூமி மெதுவாக மறையும் வைரல் காணொளி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

விண்வெளியின் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மூச்சடைக்கச் செய்யும் காணொளிப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் 2 (Artemis 2) விண்வெளிப் பயணத்தின் போது, நிலவின் விளிம்பிற்குப் பின்னால் பூமி மெதுவாக மறைவதை (Earth set) நாசா விண்வெளி வீரர் ரீட் வைஸ்மேன் (Reid Wiseman) தனது iPhone 17 Pro Max மூலம் படம்பிடித்துள்ளார்.

விண்வெளி ஆய்வுகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிநவீன கேமராக்களுக்குப் பதிலாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சாதாரண தொலைபேசியைக் கொண்டு இந்த அரிய காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓரியன் விண்கலத்தின் சிறிய ஜன்னல் வழியாக 8x சூம் (Zoom) வசதியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த காணொளிப்பதிவு, எந்த மாற்றமும் செய்யப்படாத (Raw/Unedited) ஒரு மூல காணொளிப்பதிவாகும்.

இத் தருணத்தை விவரித்துள்ள விண்வெளி வீரர் ரீட் வைஸ்மேன், “வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது. பிரபஞ்சத்தின் மிகவும் விசித்திரமான ஓரிடத்தில் அமர்ந்து கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை இது தருகிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects