ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு வழங்கி வைக்கப்பட்ட 16000 லீட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பவுசர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத்தினால் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர் ஒன்று புதிய மாவட்ட செயலகத்தில் 21.04.2026 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு பாதிக்கப்படும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடி நீர் விநியோகத்திற்கு தேவையான 16000 லீட்டர் கொள்ளளவு கொண்ட பவுசர் அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில், மாவட்ட நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், ஏறாவூர் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects